2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

கடலில் மூழ்கிய மீனவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 07 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு,  பாலமுனை கடலில் மூழ்கிய மீனவர்கள் இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மீன்பிடிப்பதற்குச் சென்ற இந்த மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் இவர்கள் இருவரும் கடலில் மூழ்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஏனைய மீனவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்போது மீனவர் ஒருவருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. மற்றைய மீனவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .