2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா

Kogilavani   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா,ஐதுசன்)

ஆகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடைத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்து இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சா.மதிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமச்சாரிய சுவாமி, மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி கபாலீசானந்தாஜீ உட்பட பல சைவப் பெரியார்கள் இந்து மத தலைவர்கள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

களுவாஞ்சிகுடி பிரதானவீதியின் சந்தியிலிருந்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் எருவச்சிலை தாங்கிய ஊர்தி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து பூசைகள் நடைபெற்று பின்னர் பவனி இராசமாணிக்கம் மண்டபத்தினை வந்தடைந்தது.

பின்னர் இந்நிழ்வில் சைவப்பெரியர்கள் ஆறுமுக நாவலர் பற்றியும் சைவத்தின் தொன்மை பற்றியும் செற்பொழிவாற்றினர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .