2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

நிறுத்தல், அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடும் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 09 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


தேசத்திற்கு மகுடம் விசேட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நிறுத்தல், அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடும் விசேட நடமாடும் சேவை நடைபெற்றுவருவதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பணிப்பாளர் ரி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

அளவீட்டு அலகுகள், நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிரான், வவுணதீவு, சித்தாண்டி ஆகிய பகுதிகளிலுள்ள பொதுச்சந்தைகளில் இந்த நடமாடும் சேவைகள் நடைபெற்றுள்ளன. நேற்று சனிக்கிழமை வந்தாறுமூலைச் சந்தையில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது. இதன்போது பெருமளவிலான வர்த்தகர்கள்  தங்களது நிறுத்தல், அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிட்டதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .