2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வறிய மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 10 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  குடும்பங்களைச் சேர்ந்த 300 மாணவர்களுக்கு பாதணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

முபீன் பௌண்டேஷன் நிறுவனத்தால் ஏறாவூர் அஸ்கர் வித்தியாலயத்தில் இம்மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.செயினுதீன், சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல்.சுல்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .