2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

டெங்கு பரிசோதனை நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி சுகாதார அலுவலகப் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை டெங்கு பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

சுகாதார வாரத்தினை முன்னிட்டு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீனின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லாவின் தலைமையில் இந்த டெங்கு பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனை நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதாகர்கள் தொண்டர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது போது நிறுவனங்கள் பள்ளிவாயல்கள் அறபு மதரசாக்கள் என்பன பரிசோதனை செய்யப்பட்டதுடன் இந்த பரிசோதனையின் போது டெங்கு நுளம்பு குடம்பிகள் உள்ள இடங்கள் அடையாளம் காணப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.றஹ்மத்துல்லா தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .