2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

வடிகானுக்காக தோண்டப்பட்ட குழியில் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படாததால் மக்கள் விசனம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 4ஆம் குறுக்குத்தெருவில் வடிகான் வேலைக்களுக்காக தோண்டப்பட்ட குழியில் இன்னும் வடிகான் வேலைகள் இடம்பெறவில்லையென அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த குழி தோண்டப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும் இன்னும் வீதியின் ஒரு பகுதியில் வடிகான் அமைப்பதற்கான எந்த வேலைகளும் இடம்பெறவில்லை. இந்த வீதியில் மற்றுமொரு பகுதில் வடிகான் அமைப்பதற்கான வேலைகளில் கம்பிக் கூடு கட்டப்பட்டு அந்த வேலையும் இதுவரை பூர்த்தி செய்யப்படாத நிலையிலுள்ளது.

இதனால் வீதியில் பயணிக்கும் பொதுமக்கள்; பெரும் அசெகரியங்களை எதிர்கொள்வதுடன் தோண்டப்பட்ட அந்த குழியில் வெள்ள நீரும் தேங்கி நிற்பதால் டெங்கு அபாயமும் ஏற்படலாமென மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மிகவிரைவாக இங்கு வடிகானை அமைக்க வேண்டும் இல்லையேல் தோண்டப்பட்ட குழியை மூடித்தர வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஷ்பரிடம் கேட்டபோது, 'இந்த விவாகரம் தொடர்பாக அந்த வடிகாணை அமைக்கும் நிதி நிறுவனத்துடன் அதன் ஒப்பந்த காரருடனும் பேசியுள்ளனே;;. அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன்' என தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .