2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டு. இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்,ரி.லோஹித்)

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி அங்குரார்ப்பண நிகழ்வு மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி மாவட்ட அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி அமைக்கப்பட்டு வருவதுடன், அடுத்த வருடம் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
 
கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கி.சேயொன் தலைமையிலும் இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சு.சிவகரனின் நெறிப்படுத்தலிலும்  நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் தமிழரசுக் கட்சியின் இளைஞர்களிலிருந்தே இளைஞர் அணி தெரிவு செய்யப்பட்டது.

இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் தமிழரசுக் கட்சியினை இளைஞர்களினுடாக வலுப்படுத்துவதற்கு ஆற்றிவரும் சேவையினைப் பாராட்டி மட்டக்களப்பு இளைஞர் அணியினர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மாகாணசபை உறுப்பினர்களான சட்டத்தரணி கி.துரைராஜசிங்கம், மா.நடராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .