2026 மே 04, திங்கட்கிழமை

கண்டலடிப் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு நலன்புரி உதவிகள்

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு – வாகரை கண்டலடிப் பிரதேச முன்பள்ளிப் பாடசாலை சிறார்களுக்கு வாகரைப் பொலிஸார் நலன்புரி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதற்கமைவாக, வாகரையில் நேற்று இடம்பெற்ற நலன்புரி உதவிகளை வழங்கும் நிகழ்வில், வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.கே.பாலித்த, வாகரைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டு முன்பள்ளிச் சிறார்களுக்கு உபகரணங்களை கையளித்தனர்.

இதன்போது, சிறார்களுக்கான போசாக்கு உணவு, பாடசாலை உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .