2026 மே 04, திங்கட்கிழமை

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பம்

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.நூர்தீன், எம்.சசிக்குமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான பாலர் பாடசாலைக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாலர் பாடசாலைக் கல்வி பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் ரி.கோபாலக்கிருஷ்ணன் தலைமையில் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரான சிவனேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.புள்ளநாயகம், தேசிய பாலர் பாடசாலை அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் குணரெட்ண, செலிட்டா நிறுவனத்தின் தேசிய இணைப்பாளர் பாமதீசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • vallarasu Monday, 11 March 2013 06:42 AM

    சபாஸ் தான் படிக்காட்டியும் படித்தவர்களை ஊக்குவிப்பதை பாராட்ட வேன்டும் இல்லையா////

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .