2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 'எச்சரிக்கை' துண்டு பிரசுரம் விநியோகம்

Super User   / 2013 மார்ச் 10 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் எச்சரிக்கை எனும் தலைப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அந்த துண்டு பிரசுரங்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவே விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த துண்டுப்பிரசுரங்களுக்கு திராவிட சேனை எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளது. மட்டக்களப்பு நகர் மற்றும் ஏறாவூர் உள்ளிட்ட பல பிரதேசங்களின் இந்த துண்டுபிரசுரங்கள்  விநியோகிக்கப்பட்டுள்ளன.குறித்த துண்டுபிரசுரத்தில்,

"இஸ்லாமிய நாடுகளின் ஆதரவுடன் இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளின் வழிநடத்தலுடன் இலங்கையை எதிர்காலத்தில் இஸ்லாமிய நாடாக மாற்றும் திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தை கிழக்கிஸ்தானாக மாற்றுவது.இதனை அடிப்படையாக கொண்டு தமிழர் தாயக பூமியை கையகப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் வியாபார நிலையங்களை விலையாகவும் குத்தகைக்கும் பெற்று ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயக பிரதேசத்தில் வியாபாரம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளை உடன் வெளியேற்றுமாறு எமது அமைப்பு எச்சரிக்கின்றது.

அத்துடன் இந்த துரோகத்திற்கு துணைபோகும் தமிழ்கட்டிட உரிமையாளர்களே உங்கள் சொத்தை அழிவிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது".

  Comments - 0

  • Balan Sunday, 10 March 2013 09:10 AM

    பொது பல சேனா விடயத்தை முஸ்லிம்கள் மத்தியிலிருந்து திசை திருப்பவே இந்த துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

    Reply : 0       0

    pirisudumawbima Sunday, 10 March 2013 07:19 PM

    அதே சேனாவினதும் ஆளும் முக்கிய புள்ளியினதும் அடுத்த கட்ட நகர்வு. தவிர இது தமிழ் மக்களினது அல்ல என்பதை உறுதியாக நம்புகிறோம்.

    Reply : 0       0

    காண்டீபம் Sunday, 10 March 2013 06:36 PM

    உப்பு தின்னவன் தண்ணி குடிச்சு தானே ஆகணும்

    Reply : 0       0

    valavan Sunday, 10 March 2013 03:29 PM

    இங்கு சொன்னது சரிதான்...

    Reply : 0       0

    fathima Sunday, 10 March 2013 03:05 PM

    பொது பல சேனாவின் புதிய முயற்ச்சி.

    Reply : 0       0

    P.J.A Sunday, 10 March 2013 02:41 PM

    இக்கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

    Reply : 0       0

    Mohanmed Hiraz Sunday, 10 March 2013 02:23 PM

    மடமையின் இழிப்பு இது?

    Reply : 0       0

    abu saarah Sunday, 10 March 2013 01:31 PM

    மேலைத்தேய சியோனிச பயங்கரவாதிகள் சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டி விட்டு அதன் மூலம் குழப்பம் விளைவித்து இலங்கை முஸ்லிம்களையும் தீவிரவாதி முத்திரை குத்த முயற்சித்தனர். அது நடைபெறாது என கண்டதும், இப்போது தமிழர்களை தூண்டிவிட முயற்சிக்கின்றனர்.
    அமெரிக்கா, நோர்வே போன்ற மேலைத்தேய ஆயுத வியாபாரிகளுக்கு இலங்கை போன்ற நாடுகளில் தொடர்ந்து ஏதாவது யுத்தம் நடந்து கொண்டே இருந்தால் தான் அவர்களின் பொருளாதாரம் வளரும்.

    Reply : 0       0

    aj Sunday, 10 March 2013 01:15 PM

    ஹிஹிஹி ஞாயிறு நகைச்சுவை.

    Reply : 0       0

    meenavan Sunday, 10 March 2013 09:57 AM

    புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கபட்டாலும் அதன் எச்சங்கள் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை அனுபவித்து முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளின் கூலியாக செயல்படுவதன் வெளிப்பாடு.

    Reply : 0       0

    Mohammed Hiraz Sunday, 10 March 2013 09:27 AM

    குத்தகைக்கு கொடுக்காமல் பூஜை செய்ய வேண்டும் எங்கிறீர்களா??? ஆமா குத்தகைக்கு கொடுக்காவிட்டால் வருமானத்தை நீங்கள் கொடுபீர்களோ...?

    Reply : 0       0

    M.A.A.Rasheed Sunday, 10 March 2013 06:08 AM

    த‌மிழ் மக்கள் சந்தோசமாக வாழ விரும்பாத கூட்டம். பாவம் தமிழ் மக்கள் பட்ட கஷ்டம் போதாதா? முஸ்லிம் மக்கள் பிரிவினையை விரும்பாதவர்கள். இதனை எல்லோரும் புரிந்து நடப்பது நல்லது...

    Reply : 0       0

    IBNU ABOO. Sunday, 10 March 2013 09:05 AM

    மீண்டும் தமிழ் பேசும் மக்களாகிய தமிழர்களையும் இஸ்லாமியர்களையும் மோதவிட்டு அரசியல் லாபம் தேடும் ஒரு குறுக்கு வழியே இது. இதனால் மீண்டும் அழிவை சந்திக்கப்போவது அப்பாவி பொதுமக்கள்தான். அதுவும் தமிழ் மக்கள் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு மீண்டும் இன்னல்களுக்கு உள்ளாகப் போகிறார்கலோ...?

    Reply : 0       0

    Sa... Sunday, 10 March 2013 08:53 AM

    தமிழர் போராட்டம் எவராலும் தடுக்க முடியாத ஒரு உண்மை. இதற்கும் ஒரு போராட்டம் வெடிக்கமலா போய்விடும்.

    Reply : 0       0

    fowmy Sunday, 10 March 2013 08:24 AM

    தங்களுக்குள் பிரிவினையாக இருந்தாலும் முஸ்லிம்கள் எனும் போது ஒன்றுபட்டு தாக்க வருவார்கள் என்பது இதுதானா?

    Reply : 0       0

    Muslim Sunday, 10 March 2013 08:18 AM

    முஸ்லிம்களை சீன்டிப்பார்ப்பது மற்றவர்களுக்கு பொழுதுபோக்காகிவிட்டது. என்று சொன்னால் மிகையாகாது, எது எப்படி போனாலும் முஸ்லிம்கள் பொருமையாய் இருப்பதே மிக மிக நல்லது. முஸ்லிம்கள் பொருமையிலந்த நாடுகலெல்லாம் சுடுகாடுகளாய் மாறி வருவதையும் கண்கூடாக பார்க்கின்றோம்.

    இலங்கை வாழ் முஸ்லிம்கள் பொருமையாய் இருப்பது அவர்களின் கோலைத்தனம் என்று யாரும் புரிந்து இருந்தால் அது அவர்களின் முட்டாள்தனமாகும். ஒரு கன்னத்தில் அடித்தால் மரு கன்னத்தை காட்டுங்கள் என்று சொல்ற மார்கத்தை பின்பற்றவில்லை. மாறாக கொலைக்கு கொலை, கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு என்று சொன்ன மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் இது எல்லாத்திற்கும் மேல் பொருமயையும் சகிப்புத்தன்மையையும் போதித்த‌ மார்க்கம்,

    அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். முஸ்லிம் நாடாய் மாற்றப் பார்க்கிறார்கள் என்று பொய்ப் பிரசாரமாய் இருந்தாலும் இதை சொல்பவர்கள் முஸ்லிம் சமுதாயம். இலங்கையில் பலம்மிக்க சமுதாயம் என்பதை மறைமுகமாக ஒத்துக்கவும் செய்கிறார்கள்.

    Reply : 0       0

    vallarasu Sunday, 10 March 2013 07:55 AM

    சும்மா ஒற்றுமையாக இருக்கும் முஸ்லிம் தமிழ் மக்களை குழப்பாமல்.... வடக்கு தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பவர்களுக்கு எதிராக ஒரு துண்டுப் பிரசுரம் போடுங்கோவன் பார்ப்போம்.

    Reply : 0       0

    Z to aj Sunday, 10 March 2013 07:02 AM

    ஆயிரக்கணக்கான வருடங்களாய் இலங்கையில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களும் முஸ்லிம் நாடுகளும் கிழக்கிஸ்தானை உருவாக்க அவர்கள் உலகின் வல்லரசாக இருந்தபோது முயற்சிக்காமல் நாலாபக்கமும் அடித்து துவைத்து எடுக்கப்படும் இந்த சந்தர்ப்பத்திலா முயற்சிக்கிறார்கள்?

    Reply : 0       0

    as.jameel Sunday, 10 March 2013 06:48 AM

    அது இருக்கட்டும். இப்போ அரசுக்கு ஒரு திசை திருப்பல் தேவைப்படுது. ஏன் தெரியுமா ஜெனீவாவிலிருந்து தப்பிக்க.

    Reply : 0       0

    sunami Sunday, 10 March 2013 06:40 AM

    முஸ்லிம்கள் இல்லாமல் தமிழர்கள் வாழ்வது கஸ்டம்.

    Reply : 0       0

    aj Sunday, 10 March 2013 06:13 AM

    அண்மைக்காலமாக தமிழர்களை இலக்கு வைத்து மதவாதம் பேசும் அடிதடி அமைச்சரின் வேலையாக இருக்கலாம் இது. என்ன இருந்தாலும் இதில் சொல்லப்பட்டு இருப்பது உண்மை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .