2026 மே 04, திங்கட்கிழமை

மாடு அறுக்கும் மடுவம் இல்லாதததால் சிரமம்

Kogilavani   / 2013 மார்ச் 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

காத்தான்குடிநகர சபை பிரிவில் மாடு அறுக்கும் மடுவமில்லாததால் தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக காத்தான்குடி மாட்டு இறைச்சிக்கடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

காத்தான்குடி நகரசபை பிரிவில் 29 மாட்டு இறைச்சிக்கடைகளும் காத்தான்குடியை அண்மித்துள்ள கிராமங்களான பாலமுனை, காங்கேயனோடை போன்ற பிரதேசங்கள் உள்ளடங்களாக 35 மாட்டு இறைச்சிக்கடைகள் உள்ளன.

காத்தான்குடி பௌஷி மாவத்தையில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த மாடு அறுக்கும் மடுவமானது சுகதார சீரகேடுகளை விளைவிப்பதாக அப்பகுதயிலுள்ள பொதுமக்களுக்கு   மட்டக்களப்பு நீதிமன்றில் தொடுத்த வழக்கையடுத்து நீதிமன்ற உத்தரவின்;படி மூடப்பட்டது.
இதன் பின்னர் மாடு அறுப்பதற்கு மடுவமில்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இதனால் இறைச்சிக்கடைகளை சீராக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரிடம் கேட்ட போது, 'புதிய மாடு அறுக்கும் மடுவம் ஒன்று நவீன முறையில் காத்தான்குடி நகர சபை பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

இதன் நிர்மாணப்பணிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் நிறைவடைந்து விடும். அதன் பின்னர் இந்த பிரச்சினை இருக்காது' என காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.



  Comments - 0

  • vallarasu Tuesday, 12 March 2013 08:52 AM

    ஈச்சை மரங்களுக்கு இலட்சக்கணக்கில் செலவு செய்யும் அமைச்சர் இருக்கும் போது நீங்கள் இந்த குறையை சொல்லலாமா???

    Reply : 0       0

    safeer Tuesday, 12 March 2013 03:20 PM

    காத்தான்குடி பௌஷி மாவத்தையில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த மாடு அறுக்கும் மடுவமானது சுகதார சீர்கேடுகளை விளைவிப்பதாக அப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு மட்டக்களப்பு நீதிமன்றில் தொடுத்த வழக்கையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது. இதன் பின்னர் மாடு அறுப்பதற்கு மடுவமில்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .