2026 மே 04, திங்கட்கிழமை

பாலடைந்த கட்டிடத்தில் மாங்கேணி தபாலகம்

Kogilavani   / 2013 மார்ச் 12 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச். அப்துல் ஹுஸைன்


மட்டக்களப்பு, வாகரை – மாங்கேணி உப தபாலக கட்டிடம் பாழடைந்த ஒரு கட்டிடத்திலேயே தொடர்ந்தும் இயங்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த யுத்தகாலம் தொடங்கி இதுவரை இந்;த உப தபாலக கட்டிடம் பாழடைந்த கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றது.

இக்கட்டிடத்தின் கூரைகள் உடைந்து காணப்படுவதால் மழைக் காலங்களில் ஆவணங்களை பாதுகாப்பதில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி காணப்படுகின்றது.

அதிகாரம் வாய்ந்த அதிகாரிகள் இப்பகுதிக்கு பலமுறை விஜயம் செய்தபோதிலும் இந்த உடைந்த உபதபாலகம் குறித்து கவனத்தில்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .