2026 மே 04, திங்கட்கிழமை

'ஏறாவூர் நகரை அழகு படுத்தல் விழிப்புணர்வு வேலைத்திட்டம்' தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2013 மார்ச் 16 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


'ஏறாவூர் நகரை அழகு படுத்தலும் சட்டமும் ஒழுங்கும் பேணலும்' என்ற விழிப்புணர்வு வேலைத்திட்டம் தொடரபான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இவ்விழிப்புணர்வு கூட்டதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகரபிதாவுமான அலிஸாஹிர் மௌலானா,  ஏறாவூர் பொலிஸ் பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த ரத்;னசூரிய, ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகும்பர, ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஏ.பி. பெரேரா உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு சட்டமும் ஒழுங்கும் பற்றி விளக்கமளித்தனர்.

இதன்போது, உரையாற்றிய ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா,

'ஊரின் ஒட்டு மொத்த அபிவிருத்திக்காக நாங்கள் எல்லோரும் எங்களை அர்ப்பணித்து இரவு பகலாக பணி செய்து கொண்டிருக்கின்றோம்.

ஏறாவூரின் அபிவிருத்திகள் இதுவரையில் 500 மில்லியன் ரூபாய்களைத் தாண்டி விட்டது. இது தவிர ஜனாதிபதியின் வருகை மூலம் இன்னும் பல அபிவிருத்திகளுக்கான உத்தரவுகளும் நிதி ஒதுக்கீடுகளும் கிடைக்கலாம் என்பது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம்.

இன்மும் மூன்று நான்கு தசாப்தங்களுக்கு பயனளிக்கக் கூடிய அபிவிருத்திகளாக அவை இருக்கலாம்.
எனவே இதில் ஊர் மக்களது ஒத்துழைப்புத் தேவை.

ஏறாவூரின் நகரக் குறியீடாக, சகல வசதிகளையும் உள்ளடக்கிய நகரசபைக் கட்டிடம் 600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .