2026 மே 04, திங்கட்கிழமை

ரிப்பர் ரக வாகனம் மோதி சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2013 மார்ச் 17 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மைலம்பாவெளியில் இடம்பெற்ற விபத்தில் 3 வயதுச் சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

மைலம்பாவெளி ஜனாதிபதி வீதியைச் சேர்ந்த முத்துக்குமரன் நிலூஷப்கன் என்ற சிறுவனே இவ்வாறு மரணமடைந்துள்ளான்.

ரிப்பர் ரக வாகனம் மோதியே இச்சிறுவன் மரணமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்கு முன்பாகவுள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் சிறுவர்கள் சிலர் ஏறி,  இறங்கி ஓடி நேற்று சனிக்கிழமை காலை விளையாடிக்கொண்டிருந்தனர். இதன்போது வீதியால் வந்த ரிப்பர் வாகனமொன்று இச்சிறுவனின் மீது மோதியுள்ளது.

ரிப்பர் ரக வாகனத்தின் டயருக்குள்  சிறுவனின் தலை அகப்பட்டுவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .