2026 மே 04, திங்கட்கிழமை

தமிழ், முஸ்லிம் குடும்பங்களின் வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 17 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்


ஐக்கிய இராச்சியத்தின் முஸ்லிம் எயிட்  நிறுவனம் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமையும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையும் நடைபெற்றன.  

ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவ்வீடமைப்புத் திட்டம் அமுலாக்கப்படுகின்றது.

ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள 32 வீடுகளுக்கான அடிக்கல்லை ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் அப்கார் அலி, முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.எல்.பைஸர்கான் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம் அஸ்மி நாட்டி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .