2026 மே 04, திங்கட்கிழமை

மட்டு. நகரின் வாவியை புராதனம் பேணும் இடங்களாக பிரேரிக்க முயற்சி

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டு. நகரின் வாவியையும் அதனை அண்டியுள்ள வரலாற்று முக்கிய பாகங்களையும் உலக புராதனம் பேணும் இடங்களாக பிரேரிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

மட்டக்களப்பு வாவி மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள புராதன வாவி ஆகும். சுமார் முப்பது மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27,527 ஏக்கர் பரப்பினைக் கொண்டுள்ளது. கடலில் இருந்து ஏறக்குறைய 20 மைல்கள் வரை உவர் நீரையும் ஏனைய பகுதி நன்னீரையும் கொண்டுள்ளது.
இவ்வாவியில் கண்டல் வகை தாவரங்கள் காணப்படுவதும் ஓர் இயற்கை அழகாகும்.

இந்தப்பிரதேசம் அதாவது கல்லடி முதல் - முகத்துவாரம் வரையிலான வாவிப்பகுதி மீண்டும் ஒரு சுற்றுலாத் துறைமுகமாக உயர்வுபெற வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.

அத்துடன் இவ்வாவியை அண்டியுள்ள பிரதேசம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் உல்லாச புரியாக உருவாக்கப்பட வேண்டும். இதன்மூலம் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டும் அதேவேளை தனிமனித வருமானமும் அதிகரிக்கப்படலாம்.

மட்டக்களப்பு பிரதேசமானது இயற்கையான வளங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒல்லாந்தர்காலக் கோட்டை, கோவில்கள், தேவாலயங்கள், பாடசாலைகள் என்பன இன்றும் அந்தக்காலத்தின் கட்டிட அமைப்புகளுடன் காணப்படுகின்றது.

அவை சரியான முறையில் புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதன்மூலம் தொடர்ச்சியான உல்லாசப் பயணிகளை மேலும் வரவழைக்கலாம்.

இலங்கையில் தற்பொழுது புராதனம் பேசும் புனித பிரதேசங்களாக அநுராதபுரம், பொலன்நறுவை, சிகிரியா, தம்புள்ளை, கண்டி, காலிக் கோட்டை, சிங்கராஜவனம், நக்கில்ஸ் மலைத்தொடர் போன்றவை காணப்படுகின்றன.

கிழக்கின் பழமையும் பெருமையும் தரும் இந்த புராதன விடயங்களை UNESCO வினது புராதனம் பேணும் நகரங்களின், பொருட்களின் வரிசையில் உள்ளடக்க இயலுமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் இதனைக் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாதகவும் இலங்கை சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .