2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் இரு பிரதேச செயலாளர் பிரிவுகள் தெங்கு அபிவிருத்திக்காக தெரிவு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 18 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்
, எம்.எஸ்.நூர்தீன்

'கப்றுக புறவர' என்னும் தெங்கு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்காக 2013ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவும் ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

'கப்றுக புறவர' என்பது இலங்கையிலுள்ள தெங்குக் கைத்தொழிலை விருத்தி செய்வதற்காக அமுல்படுத்தப்படும் பிரதான நிகழ்ச்சித்திட்டங்களில் ஒன்றாகும்.

தெங்குப் பயிர்ச் செய்கையுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதனை அடிப்படையாகக் கொண்டு இச்செயற்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.கே.பமுனு கொத்ஹே கூறினார்.

இதேவேளை மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பட்டாதாரிப் பயிலுநர்கள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் நன்மைகள் பற்றிய பயிற்சிநெறியொன்று இன்று திங்கட்கிழமை ஆரையம்பதி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தென்னைப் பயிர்ச் செய்கைச் சபையின் பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.கே.பமுனு கொத்ஹே, கப்றுக புறவர நிகழ்ச்சித் திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.நவ்பர் அலி, தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.கமால் சப்ரி உள்ளிட்ட பலர் இப்பயிற்சிநெறி நிகழ்வில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .