2026 மே 04, திங்கட்கிழமை

யானை தாக்கி விவசாயி பலி

Suganthini Ratnam   / 2013 மார்ச் 19 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரி, முள்ளிவட்டுவான் பகுதியில் உள்ள வயல்வெளியிலேயே  நேற்று திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவட்டுவான் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான பொன்னுத்துரை மயில்வாகனம் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யானையைக் கண்ட இவர் அருகில் உள்ள குளம் ஒன்றில் பாய்ந்து நீந்தி தப்பித்துக்கொள்ள முயற்சித்தபோதிலும், இவரைப் பின் தொடர்ந்து துரத்திய யானையும் அந்தக் குளத்தினுள் சென்று இவரை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனைக் கண்ட பொதுமக்கள் இவரது சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இது  தொடர்பான விசாரணையை  வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

  Comments - 0

  • priya Tuesday, 19 March 2013 04:19 AM

    இந்த பிரச்சினை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் யானையை கைது செய்வார்களா?????????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .