2026 மே 04, திங்கட்கிழமை

கிரான் பிரதேச மக்களுக்கு கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 19 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 11 குடும்பங்களுக்கு  ஒருதொகை கூரைத்தகடுகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கிவைத்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் உட்பட அனர்த்தங்களினால் வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கே வீடுகளை திருத்தியமைப்பதற்கான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒருதொகை கூரைத்தகடுகள் நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம்  விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த கூரைத்தகடுகள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 குடும்பங்களுக்கு கூரைத்தகடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் வடிவேல் ஜீவானந்தம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .