2026 மே 04, திங்கட்கிழமை

கும்புறுமூளையில் ஆயுதங்கள் மீட்பு

Super User   / 2013 மார்ச் 19 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன், ஆர்.அனுருத்தன்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுமுளை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்னவின் வழிகாட்டலில் பொலிஸ் புலனாய்வுத்துறை அதிகாரி எம்.தாஹா தலைமயிலான குழுவினர் குறித்த இடத்திற்கு சென்று ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு - பொலனறுவை பிரதான வீதியின் கும்புறமுளை சந்தியிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள காட்டு பகுதிக்குள் இந்த ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு ஒன்றும், மூன்று மிதிவெடிகளும் இதன்போது கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கப்பட்ட ஆயதங்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .