2026 மே 04, திங்கட்கிழமை

பின்தந்திய கிராமத்து பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவி

Menaka Mookandi   / 2013 மார்ச் 19 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு, கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மாதகி என்ற பின்தங்கிய கிராமத்திலுள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கென யூஎஸ் எயிட் நிறுவனத்தினால் வெதுப்பகம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

கிரான் கிழக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி செல்வி சற்குணராஜா ஜெயரஞ்சி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யூஎஸ் எயிட் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மயிஸ் நடானியல் மற்றும் அந்நிறுவனத்தின் பதில் பிராந்திய முகாமையாளர் பெல்பீலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன், நிறுவனத்தின் திட்மிடல் உதவியாளர் கே.ஜெகதீஸ்வரி, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரி.நிர்மலராஜ் மற்றும் கிரான் கிழக்கு கிராமசேவையாளர் நா.ரவீந்திரன், திவிநெகும திட்ட உத்தியோகஸ்தர் எஸ்.ரொபட், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கே.துரைசிங்கம், பலநோக்குக் கூட்டுறவுச்சங்க உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .