2026 மே 04, திங்கட்கிழமை

த.ம.வி.பு. கட்சியிலிருந்து பிரதீப் மாஸ்டர் உட்பட மூவர் நீக்கம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 20 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சி அறிவித்துள்ளது.

இதேவேளை கட்சியின் முன்னாள் செயலாளர் எ.கைலேஸ்வரராஜா மற்றும் கட்சியின் உறுப்பினர் எம்.வரதராஜன் ஆகியோரும் ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் கட்சியின் சகல பொறுப்புக்களில் இருந்தும் அடிப்படை அங்கத்துவத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

மேற்படி மூவரும், கட்சியின் யாப்பு விதிகளை மீறி செயற்பட்டார்கள் மற்றும் கட்சியின் அதிகாரத்தினை துஸ்பிரயோகம் செய்தார்கள் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கட்சியின் பணிக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அப்பணிக்குழுவின் முன், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் உரிய முறையில் பதிலளிக்கத் தவறினார்கள் என்ற அடிப்படைகியில் கட்சியின் அங்கத்துவத்திலிருந்து அம்மூவரும் நீக்கப்பட்டனர் என்று த.ம.வி.பு கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த காலங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்த உறுப்பினர்களையும் மக்கள் பிரதிகளையும் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து துணிகரமாக நீக்கியுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .