2026 மே 04, திங்கட்கிழமை

வெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் நிறைவு

Kogilavani   / 2013 மார்ச் 21 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எல்லைக் கிராமமான வெலிக்காகண்டி மக்கள் நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன் நடாத்திய ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வழங்கிய உறுதிமொழியையடுத்து இவ் ஆர்ப்பாட்டம் முடிவுக்க கொண்டுவரப்பட்டுள்ளது.

வெலிக்காகண்டி கிராம மக்களை யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்குமாறு கோரியும் இந்த கிரமாத்திற்கான வீட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கோரியும் 57 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு விஜயம் செய்த கிழக்;கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அக்கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித்தருவதாக உறுதிமொழி வழங்கினார்.

இதையடுத்து;ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .