2026 மே 04, திங்கட்கிழமை

கல்லடி பாலத்தை ஜனாதிபதி திறந்துவைப்பார்

Super User   / 2013 மார்ச் 21 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர் கான்

இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் 197 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி பாலம் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பவுள்ளது.

சுமார் 300 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மிக நீளமான இரும்பு பாலம் என்று அழைக்ப்படும் கல்லடி பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது.

50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ளது. இது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .