2026 மே 04, திங்கட்கிழமை

அதிபரை இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபரை இடமாற்றகோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

அரசடித்தீவு  விக்னேஸ்வரா ஆலய பரிபாலன சபை, விக்னேஸ்வரா பழைய மாணவர் சங்கம், விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம், அரசடித்தீவு, அரசடித்தீவு வடக்கு கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், விக்னேஸ்வரா அறநெறி பாடசாலை, விக்னேஸ்வரா இளைஞர் கழகம், இளங்கதிர் கலா மன்றம் போன்ற அரசடித்தீவை சேர்ந்த பதிநான்கு பொதுநலன் சார் அமைப்புக்கள் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசடித்தீவு பிள்ளையார், ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்டமானது அரசடித்தீவு மாரியம்மன் வீதியூடாக பட்டிப்பளை பிரதேச செயலகம்வரை சென்றது.

இதன்போது, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமாரிடம் அமைப்புக்கள் சார்பாக முன்னாள் மட்ஃஅரசடித்தீவு விக்னேஸ்வரா பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் க.கிருபானந்தசிவம்  கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .