2026 மே 04, திங்கட்கிழமை

குடிநீரின் தரத்தைப் பரிசோதிக்க நவீன ஆய்வுக்கூடம் திறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


குடிநீரின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட ஆய்வுகூடமொன்று மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதிநிதியும் தலைமைச் செயலகத்தின் செயலருமான விலி வென்டன்பெகியினால் இவ் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்பட்டது.

பதின்மூன்று மில்லியன் ரூபாய் செலவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் ஒக்ஸ்போம் நிறுவனத்தின் ஊடாக எஸ்கோ நிறுவனத்தினால் இப்புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு இவ் ஆய்வுக்கூடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் எஸ்.சதுர்முகத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .