2026 மே 04, திங்கட்கிழமை

சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான ஆய்வு கருத்தரங்கு

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.அனுருத்தன்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு எதிர்காலத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுங்கமைப்பு நடைமுறைகள் தொடர்பான ஆய்வு கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை பாசிக்குடா அமதீஸ் சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது.

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரொபட் பென்லி, யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகஸ்தர் த.சக்திவேல், கொழும்பு, கிழக்கு, தென்கிழக்கு பல்கலைக் கழகங்களின் பேராசிரியர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது சுற்றுலாத்துறையின் மூலம் கிராமிய மக்களுக்கு நன்மை பெறக் கூடிய வழிவகைளை இனம் காணப்பட்டது.

உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தல், வேலைவாய்ப்பு, உள்ளூர் சுற்றுலா விடுதி ஊக்குவிப்பு, கடைத்தொகுதி வடிவமைப்பு, மீன்பிடி, விவசாயம், வியாபாரம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் மற்றும் புதிய சுற்றுலா மையங்களை இனம் காணாமல் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .