2026 மே 04, திங்கட்கிழமை

கிழக்கில் படையினர் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Kanagaraj   / 2013 மார்ச் 22 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கில் பரவலாக படையினர் இன்று காலை முதல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தனர். கிழக்கு மாகாண பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தினாலேயே இந்தத் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த சீருடையில் இருந்த படையினரே இந்த துண்டு பிரசுரங்களை நியோகித்துக்கொண்டிருந்தனர்.

'பொய்ப்பரச்சாரங்களைக் கண்டு ஏமாறுவோமா ? உண்மையை அறிந்து சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா? என்ற கேள்வியுடன் ஆரம்பிக்கும் அந்தப் பிரசுரத்தில்.

 'பேரன்பு மிக்க முஸ்லிம்களே அஸ்ஸலாமு அலைக்கும் !

பல நூற்றாண்டுகளாக சிங்கள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இலங்கை மக்கள் என்ற ரீதியில் ஒன்று பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

அன்று அந்நிய நாட்டுப் படையெடுப்பின்போது ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடியது மட்டுமல்லாது 1948 இல் நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்காக முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் கல்விமான்கள் வழங்கிய ஒத்துழைப்பினை எவராலும் மறந்து விட முடியுமா?

நாம் எல்லோரும் இலங்கைத் தாயின் சகோதர சகோதரிகள் மட்டுமல்லாது இது நமக்குரிய நாடும் கூட. எமக்குள் இருக்கும் சகோதரத்துவத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சில அடிப்படை வாதிகள் தந்திரோபாயமாக எமக்குள் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பது அம்பலமான விடயம்.

வெளிநாட்டு நிதியில் வாழும் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளினால் வழிநடாத்தப்படும் தலைவர்கள் உங்களுடன் உங்கள் பிரதேசத்தில் இருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் பாதுகாப்புத் தரப்பினர் அன்றிலிருந்து இன்று வரை உங்களையும் உங்களது கிராமங்களையும் பாதுகாப்பதற்கு எவ்வளவோ தியாகங்களைச் செய்துள்ளார்கள்.

இதனைக் கடந்த காலத்தில் நிரூபித்துள்ளதுடன் எதிர்காலங்களிலும் அவ்வாறு பொறுப்புடன் செயற்படுவார்கள். சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற பிரிவினை வார்த்தைகள் பாதுகாப்புத் தரப்பினருக்குப் பழக்கமானவை அல்ல.

இன்று இலங்கைக்குள் எந்தவொரு இனரீதியான பிரிவுகளுக்கும் இடமளிக்கப்படவில்லை. இலங்கைக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு பல வெளிநாட்டு சக்திகள் கடந்த மூன்று தசாப்த காலமாக முயற்சித்தார்கள். அந்த சூழ்ச்சிகள் தோற்றுப்போய் விட்டன.

இந்த யுத்தத்தில் தாய் நாட்டைக் காப்பதற்கு முஸ்லிம் சகோதரர்கள் பலர் உயிர் நீத்தார்கள் அல்லவா? அப்படியாயின் முஸ்லிம்கள்  இந்நாட்டின் அபிமானம் கொண்ட இலங்கை இனமன்றி அடிப்படை வாதிகள் கூறுவது போன்று முஸ்லிம்கள் வேறு இனமல்ல. இதைத் தெளிவுடனும் புத்தியுடனும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.

உங்களின் மத வழிபாட்டிற்கும் கலாசாரத்தைப் பாதுகாப்பதற்கும் நிம்மதியாக வாழ்வதற்கும் இன்று மேலான சுதந்திரம் உங்களுக்குக் கிடைத்துள்ளது.

இதேவேளை பல்வேறு முகமூடியணிந்து வரும் நாசகார சக்திகளிடம் நாம் மாட்டிக் கொண்டால் நாமே நமது சுதந்திரத்தை நாசம் செய்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது போய் விடும்.

முஸ்லிம், தமிழ், சிங்களம் என்ற எல்லா இனங்களும் ஒன்று பட்டு ஒரே இலங்கையராகப் பெற்ற சமாதானத்தை நிலை நிறுத்துவதோடு அடிப்படைவாத எண்ணத்தைத் தூண்டி பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கும் அமைப்புக்களை விரட்டியடிக்க வேண்டும்.' என்றும் அந்தப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • w Friday, 22 March 2013 11:12 AM

    உண்மையிலேயே இவர்கள் இப்படி இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்...

    Reply : 0       0

    IBNU ABOO. Friday, 22 March 2013 03:23 PM

    அப்படியானால் சட்டத்தை புறத்தே தள்ளிவிட்டு அதை தங்கள் கையில் எடுத்து மோசமான ஒரு சர்வாதிகார நாட்டிலும் இல்லாத வகையில், பாரம்பரியமாக இந்நாட்டில் அங்கீகாரத்துடன் கட்டிக்காத்துவந்த சிங்கள - முஸ்லிம் சகோதர உறவை பிரிக்க செய்த பள்ளிவாயில் உடைப்புகள் ஹலாலை ஒழித்தல், ஹபாயா கலைதல் போன்றவற்றை சுதந்திரமாக, பகிரங்கமாக செய்த, செய்துகொண்டிருக்கிற இனவாத குழுக்களை கண்டிக்காமல், சட்டத்தின் முன் கொண்டுவராமல் நீங்களும், பொலிஸாரும் வேடிக்கை பார்ததன் மர்மம் என்ன..?

    Reply : 0       0

    Milm Anton Friday, 22 March 2013 05:32 PM

    தயவு செய்து அந்த அடிப்படை வாதிகளை அரசும் பாதுகாப்புப் படையும் கட்டுப்படுத்தினால் சரிதானே?

    Reply : 0       0

    pirisudumawbima Friday, 22 March 2013 07:54 PM

    யார் அந்த அடிப்படைவாதிகள்... எங்களுடன் எங்களுக்குள்ளேயே? இப்போது பிரச்சினையை தூண்டுபவர்கள் அங்கேதானே இருக்கிறார்கள். இங்கு இல்லையே? என்ன அபத்தம்.

    Reply : 0       0

    justice seeker Saturday, 23 March 2013 04:30 AM

    "வெளிநாட்டு நிதியில் வாழும் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளினால் வழிநடாத்தப்படும் தலைவர்கள் உங்களுடன் உங்கள் பிரதேசத்தில் இருக்கின்றார்கள்."
    மேற்கண்ட கூற்று சிறிது வேடிக்கையானதும் விஷமத்தனமானதும் ஆகும். பொது பல சேனாவுக்கே இக்கூற்று முற்றிலும் பொருத்தமானதாக இருந்தும் இப்பிரதேசத்திலேயே அத்தகைய தலைவர்கள் இருப்பதாகக் கூறுவது இத் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டவர்களின் உளச்சுத்தியைச் சந்தேகத்துள்ளாக்குகின்றது.

    மேற்கண்ட கூற்று சிறிது ...')">Reply : 0       0

    shafee Saturday, 23 March 2013 05:22 AM

    they r cheating us...
    actually they need our support to show the world that they r innocent...
    Dnt blve these racists..

    Reply : 0       0

    M.Haniff Saturday, 23 March 2013 09:26 AM

    இது ஹர்தாலை முறியடிப்பதற்கான ஒரு தந்திரம். ஹர்தாலின் மூலம் இலங்கை முஸ்லிம்களுக்கும் நடக்கும் அநியாயங்களை உலகம் அறிந்து விடும் என்ற அச்சம். ஹலால் பிரச்சினையில் பொது பல சேனா கை வைத்து அதனை நிறுத்தும் வரை இவர்கள் உறங்கிக் கொண்டா இருந்தார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .