2026 மே 04, திங்கட்கிழமை

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


தேசத்திற்கு மகுடம் அங்குரார்ப்பண நிகழ்வுகளுக்காக இன்று வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூருக்கு வருகை தந்த ஜனாதிபதி மஹிந்த ராஜகஷ ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானாவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏறாவூருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, ஜனாதிபதி அக்கல்லூரியின் நூற்றாண்டு விழாவுக்கான முதல் நாள் தபால் தலையையும் வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், உற்பத்தித் திறன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண அமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .