2026 மே 04, திங்கட்கிழமை

கடற்றொழில் அலுவலகம் அமைச்சர் ராஜிதவினால் திறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 22 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

கடற்றொழில் அமைச்சினால் 36 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள மாவட்ட அலுவலக கட்டிடத்தை கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று மாலை திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத் தொகுதியில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட கடற்றொழில் திணைக்கள பிரதி பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இம்மாவட்டத்திலுள்ள 23 ஆயிரம் மீனவ குடும்பங்களின் தேவைகள் இவ் அலுவலகத்தினூடாக நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .