2026 மே 04, திங்கட்கிழமை

ஆராதனை மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Kogilavani   / 2013 மார்ச் 23 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் கேட்போர் கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இக் கட்டிடம் சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவிருக்கின்றது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், உற்பத்தித் திறன் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் ஏறாவூர் நகர பிதாவுமான அலிஸாஹிர் மௌலானா, தேசிய காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம் நஸீர் ஆகியோர் இந்நிகழ்வில் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .