2026 மே 04, திங்கட்கிழமை

கிரான் பிரதேசத்தில் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு கூரைத்தகடுகளும் சீமெந்துகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன்,  மலசலகூடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடைபெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியொதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் இவ்வேலைத்திட்டம் தொடர்பான நிகழ்வு மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் கிரான் மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மீள்குடியேற்ற அமைச்சர் குணரெட்ன வீரக்கோன், மலசலகூடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததுடன் கூரைத்தகடுகளையும் சீமெந்துகளையும் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தார்.

கிரான் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 400 குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 50,000 ரூபா படி மலசலகூடத்திற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், 100 குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதற்கட்டமாக 40,000 ரூபா பெறுமதியான கூரைத்தகடுகளும் சீமெந்துகளும் வழங்கிவைக்கப்பட்டன

மலசலகூடங்களை கட்டுவதற்காக  மீள்குடியேற்ற அமைச்சினால் 20 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாஸ, மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுதீன், மீள்குடியேற்ற மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், கிரான் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .