2026 மே 04, திங்கட்கிழமை

வறுமை நிறைந்த மாவட்டமாக மட்டக்களப்பு: மாவட்ட செயலாளர்

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர் கான்

நாட்டில் வறுமை நிறைந்த மாவட்டமாக மட்டக்களப்பு உள்ளது என மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பினை அடுத்தே இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய இந்த வருடம் 11 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியினை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிரான் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .