2026 மே 04, திங்கட்கிழமை

பொண்டுகள்சேனையில் பாடசாலை கட்டிடம் திறப்பு

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பொண்டுகள்சேனை கணேசா வித்தியாலயத்தில் பாடசாலை கட்டிடமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தேசத்துக்கு மகுடம் திட்டத்துக்கு அமைவாக அமைக்கப்பட்ட இந்த கட்டிடம் பாடசாலை கடந்த கால யுத்தத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

சுற்றாடல் மற்றும் கனியவளத்துறை அமைச்சின் அனுசரனையுடன் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளின் அடிப்படையில் இந்த கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடத்துக்கான நிதி புவிசரித்திரவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தினால் வழங்கப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாகவுள்ள இந்த பகுதி மாணவர்களின் நன்மை கருதி இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

புவிசரித்திரவியல் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மாவட்ட பணிப்பாளர் பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இதன் திறப்பு விழாவில், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சுற்றாடல் வளத்துறை அமைச்சின் செயலாளர் பஸ்ஸநாயக்க, புவிசரிதவியல், சுரங்கங்கள் பணியகத்தின் தலைவர் விஜயானந்த, செயலாளர் அனில்பீரிஸ், கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் கிருஸ்ணானந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .