2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பிலுள்ள வறுமை குடும்பங்கள் வீடுகளை நிர்மாணிக்க நிதியுதவி

Menaka Mookandi   / 2013 மார்ச் 25 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தை வறுமையான மாவட்டமாக மத்திய வங்கி பிரகடனப்படுத்திய நிலையில் மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு வீட்டுப் பயனாளிகளுக்கு வீடுகள் அமைப்பதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை டேபா மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வீட்டுப் பயனாளிகள் 700 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் அதில் முதல் கட்டமாக ரூபாய் இருபதினாயிரம் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் செயலகம் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபை அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன், திட்டமிடல் பணிப்பாளர் என்.நெடுங்சழியன், வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் எஸ்.ஜெகநாதன், நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர் பேர்ட்டி பிரேம்லால், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சிப்லி பாறுக் மற்றும் மாவட்ட பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொன்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .