2026 மே 04, திங்கட்கிழமை

வாகனங்கள் கையளிப்பு

Super User   / 2013 மார்ச் 25 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினால் புதிய பஸ் வண்டியொன்று இன்று திங்கட்கிழமை காலை கையளிக்கப்பட்டது. போக்குவரத்து அமைச்சினால் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு இந்த பஸ் வண்டி வழங்கப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் றகீம் உட்பட பஸ் பலர் கலந்துகொண்டனர். இந்த புதிய பஸ் வண்டி காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி வழியாக மட்டக்களப்பு போனதா வைத்தியசாலைக்கு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக காத்தான்குடி டிப்போ முகாமையாளர் தெரிவித்தார்.

இதேவேளை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு புதிய அம்பியுலன்ஸ் வண்டியொன்று கையளிக்கப்பட்டது. இந்த வைபவத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது புதிய அம்பியுலன்ஸ் வண்டியினை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.ஆதிலிடம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கையளித்தார்.


  Comments - 0

  • vallarasu Tuesday, 26 March 2013 03:47 PM

    ஐய்யோ அவங்கட தெயட்டக்கிருலைக்கு எல்லா டிப்போக்களுக்கும் பஸ்கொடுத்துள்ளார். இதற்கும் போய் இவர்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .