2026 மே 04, திங்கட்கிழமை

இராணுவத்தினர் விஷேட ரோந்து நடவடிக்கைகள்

Super User   / 2013 மார்ச் 26 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்ப மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களின் பிரதான வீதிகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையிலும் விஷேட ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

காத்தான்குடி பிரதான விதியில் நேற்று திங்கட்கிழமை குவிக்கப்பட்ட இராணுவத்தினர் தொடாந்து இன்று செவ்வாயக்கிழமையும் பாதுகாப்பு கடமையிலும் ரோந்து நடவடிக்கைளிலும் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி பிரதான வீதியின் குர் ஆன் சதுக்கம் தொடக்கம் பிரதான வீதியின் சகல சந்திகளிலும் ஆங்காங்கே இராணுவத்தினர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று திங்கட்கிழமை ஹர்தால் காரணமாக ஸ்தம்பிமடைந்திருந்த கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் இன்று செவ்வாய்க்கிழமை வழமை நிலைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .