2026 மே 04, திங்கட்கிழமை

'வாழ்வின் எழுச்சி'யால் மட்டு. அபிவிருத்தி கண்டுள்ளது: வி.முரளிதரன்

Menaka Mookandi   / 2013 மார்ச் 28 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


'மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட எல்லா வழங்களும் உள்ள மாவட்டம். இம்மாவட்டம் வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்தின் கீழ் அதிகளவு அபிவிருத்தி கண்டுள்ளது' என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளிதரன்.

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கல்வியிலும், பொருளாதாரத்திலும் நாம் முன்னேற்றமடையும்போதுதான் சவால்களுக்கு முகம்கொடுத்து சிறந்த பிரஜைகளாக வாழ்வதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக திகழலாம்' என்றார்.

'ஒரு தராசில் உள்ள இரு தட்டில் ஒரு பக்கத்தில் கல்வியையும் மறுபக்கம் பொருளாதாரத்தையும் வைக்கும் போது கூடிக் குறையாமல் இருபக்கமும் சமமாக இருப்பது போல் இரண்டிலும் வளம்பெற வேண்டும்' என்றார்.

'மட்டக்களப்பு மாவட்டம் ஏனைய மாவட்டங்களை விட எல்லா வழங்களும் உள்ள மாவட்டம்;. திவிநெகும திட்டத்தின் கீழ் அதிகளவு அபிவிருத்தி கண்டுள்ளது. இதற்கு உதாரணங்களாக மீன்பிடி, விவசாயம், வீதிகள், பாலங்கள், வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட பலவற்றைக் கூறலாம்' என்றார்.

'பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் ஒழுக்க வளர்ச்சிகளில் முழுக்கவனம் செலுத்த வேன்டும். எதிர் காலத்தில் பட்டப்படிப்பு இல்லாமல் அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில் வாய்ப்பை பெறவே முடியாது. எனவே பெற்றோர் தங்களது பிள்ளைகளின் கல்வியில் கூடிய கரிசினை கொள்ள வேன்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .