2026 மே 04, திங்கட்கிழமை

சட்டவிரோத ஆஸி. பயணத்துக்கு எதிராக பிரசாரம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 30 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.நூர்தீன்


சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகின் மூலம் செல்ல வேண்டாம் எனும் பிரச்சாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகனங்களின் மூலமும், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலமாகவும் இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அராசங்கமும், இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதுவராலயமும் இணைந்து இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. படகின் மூலம் அவுஸ்திரேலியா நாட்டுக்கு செல்ல முற்படும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .