2026 மே 04, திங்கட்கிழமை

உறுகாமம் கிராமத்திற்கு அமைச்சர் றிசாட் விஜயம்

Kogilavani   / 2013 மார்ச் 31 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு, உறுகாமம் கிராமத்திற்கு நேற்று முன்தினம் விஜயம்செய்த அமைச்சர் றிசாட் பதியுதீன் அங்கு இடம்பெற்ற பல்வேறு அபிவிருத்தி  நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

கிழக்கு மாகாண சபை பிரதி முதல்வர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்  கிழக்கு மாகாண  அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிப்லி பாறூக்,  மட்டக்களப்பு மத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.நஸீரா, மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.நஸீர் உட்பட பெரும் தொகையான மக்களும் கலந்துகொண்டனர்.

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட இக் கிராமத்தில் பல்தேவைக்கட்டடம், பாடசாலைக் கட்டடம், நீர்தாங்கி, வீதிகள் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் இக்கிராமத்திற்கான பஸ் சேவையும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, இக் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள பள்ளிவாசலில் விசேட தொழுகையும் நடத்தப்பட்டது.



  Comments - 0

  • vallarasu Monday, 01 April 2013 10:59 AM

    ஐயாமாரே... நீங்கள் இப்படி சும்மா மக்களைப் போட்டு எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்ற போகிறீர்கள் என்று பார்ப்போம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .