2026 மே 04, திங்கட்கிழமை

சமூகத்தின் நன்மைகருதி முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றிணை வேண்டுகோள்

Super User   / 2013 மார்ச் 31 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

சமூகத்தின் நன்மைகருதி முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றிணைய வேண்டுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், அதாவுல்லாஹ், றிசாட் பதியுதீன் ஆகிய மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களையும்  ஒன்றுபடுமாறே அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீள்குடியேற்ற கிராமமான றூகம் கிராமத்தில் நடைபெற்ற அபிவிருத்தி விழாவில் உரையாற்றும்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமீர் அலி,

இன்று முஸ்லிம் சமூகம் பல்வேறு சிக்கல்களையும் பிரச்சினைகளையும் சந்தித்து வருகின்றது. முஸ்லிம்கள் தமது மார்க்க கடமைகளை செய்வதற்கு கூட அச்சம் நிறைந்த ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் ஷரிஆ சட்டத்தினை கொச்சைப்படுத்தப்படும் நிலையும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இன்னும் அபிவிருத்தி என்றும் கொந்தராத்து என்றும் பேசிக்கொண்டிருக்கும் நேரமல்ல இது.

முஸ்லிம்களின் ஈமானையும் ஷரீஆவையும் பாதுகாக்கம் நேரமாகும். முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை அச்சமின்றி செய்வதற்கு சந்தப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நேரமாகும்.முஸ்லிம்களின் நன்மை கருதி அனைத்து முஸ்லம் அரசியல் தலைவர்களும் இதில் ஒன்றுபட வேண்டும்.

இந்த அடிப்படையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகிய மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் ஒன்றுபட்டு தற்போது முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை கையாளமுனையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இன்னும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் ஒன்றுபடாமல் விட்டால் எதிர்காலத்தில் நாங்கள் பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும். இந்த மூன்று முஸ்லிம் அரசியல் தலைவர்களும் தமக்குள் இருக்கின்ற அரசியல் கட்சி வேறுபாடுகளை மறந்து முஸ்லிம் சமூகத்தின் நலன் கருதி ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களின் நலன் குறித்து ஒரே மேசையில் இருந்து பேசுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த மூன்று முஸ்லிம் அரசியல் தலைமைகளும் முஸ்லிம்களின் நலன் ருதி ஒன்று பட்டால் அது இந்த நாட்டிலுள்ள இனவாதிகளுக்கு சொல்லும் பெரிய செய்தியாகும்" என்றார்.

  Comments - 0

  • vallarasu Sunday, 31 March 2013 05:55 AM

    ஐயா... நீங்கள் சொல்லும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறது, இதை நீங்கள் முன்னின்று செய்தால் என்ன?

    Reply : 0       0

    mattakkalappaan Sunday, 31 March 2013 09:09 AM

    எல்லா மாடும் ஓடுதெண்டு இவரும் ஓடுராரு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .