2026 மே 04, திங்கட்கிழமை

காத்தான்குடியில் பெண்களுக்கான பள்ளிவாசல் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்


மட்டக்களப்பு, காத்தான்குடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் தொழுவதற்கான பள்ளிவாசல் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மௌலானா கபுறடி பள்ளிவாசல் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெண்கள் தொழுவதற்கான இந்தப் பள்ளிவாசல் மஸ்ஜிதுஸ் ஸய்யிதா பத்ரியா அஹமட் என்னும் பெயரைக் கொண்டமைந்துள்ளது.

காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சாவின் வேண்டுகோளுக்கு அமைய  சவூதி அரேபியாவின் நன்கொடையாளர் ஒருவரின் 21 இலட்சம் ரூபா நிதியுதவியிலும் ஊக்குவிப்பு உற்பத்தித்திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூதின்; முயற்சியினாலும் இந்தப் பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .