2026 மே 04, திங்கட்கிழமை

'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' நூல், இறுவட்டு மூலம் கிடைத்த நிதி றிஸானாவின் பெற்றோரிடம் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.நூர்தீன்,-எஸ்.எச்.அமீர்


காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட 'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' என்னும் நூல் மற்றும் இறுவெட்டு விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதி றிஸானா நபீக்கின் பெற்றோரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணம் றிசானாவின் தந்தையான எம்.எஸ்.நபீக்கிடம் கையளிக்கப்பட்டதுடன், 'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' என்ற தலைப்பிலான 50 நூல்களும் றிசானாவின் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி மீடியா போரத்தினால் வெளியிடப்பட்ட 'றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி' என்னும் நூல் மற்றும் இறுவெட்டின் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து செலவு தவிர்ந்த ஏனைய நிதியே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வின்போது காத்தான்குடி மீடியா போரம் இந்த  நூலையும் இறுவெட்டையும் வெளியிட்டமைக்காக காத்தான்குடி மீடியா போரத்தின் இந்தப் பணியினை பாராட்டி மூதூர் ஹோம்பீஸ் நிறுவனத்தினால் பாராட்டு பத்திரமொன்றும் காத்தான்குடி மீடியா போரத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்வில்; காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய சமாதான ஒன்றியத்தின் தலைவருமான மௌலவி ஏ.எம்.அப்துல் காதர், காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, அதன் பொருளாளர் எஸ்.ஏ.கே.பலீலுர் றஹ்மான், மூதூர் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் மௌலவி எம்.தஸ்ரீக் நத்வீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .