2026 மே 04, திங்கட்கிழமை

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவலடி கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த 9 பேர் மட்டக்களப்பு நாவலடி கடலில் நேற்றுமுன்தினம்  ஞாயிற்றுக்கிழமை குளித்துக்கொண்டிருந்தனர். இதன்போது 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆசிரியர் ஒருவரும் 4 மாணவர்களுமே இவ்வாறு உயிரிழந்தனர். 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.குணதிலக பிரேத பரிசோதனையை மேற்கொண்டதாகவும் இதன் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பதுளையைச் சேர்ந்த ஆசிரியரான கந்தசாமி பிரதாபன் (வயது 40), மாணவர்களான போல்ராஜ் போல்சான் (வயது 17), பாலசுப்ரமணியம்; அபேசன் (வயது 17), கனகசபை சுதர்சன் (வயது 16) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .