2026 மே 04, திங்கட்கிழமை

காவத்தமுனையில் சிறுமியின் சடலம் மீட்பு

Kogilavani   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 13 வயது சிறுமி ஒருவரது சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி – காவத்தமுனை பாடசாலை வீதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சிறுமி விசேட தேவையுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சடலம்  பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .