2026 மே 04, திங்கட்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் ஊடாக மட்டக்களப்பிற்கே அதிக அபிவிருத்தி: முரளிதரன்

Super User   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட நான்கு மாவட்டங்களின் அபிவிருத்திக்கு 16 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த நிதி தேசத்துக்கு மகுடம் தேசிய வேலைத்திட்டத்துக்கு அமைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

தேசத்தின் மகுடம் வேலைத்திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

"அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற தேசத்துக்கு மகுடம் என்ற கண்காட்சியின் ஊடாக  கிட்டத்தட்ட 16,000 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக நான்கு மாவட்டத்திற்கு செலவளிக்கப்படுகிறது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களுக்கே செலவவிடப்பட்டு கொண்டிருக்கிறது. அதில் மட்டக்களப்பில் தேசத்திற்கு மகுடம் நிதியில் அதிகளவான பணம் செலவிடப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதியினால் அபிவிருத்திகள் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எங்கு சென்றாலும் அபிவிருத்தி. வுட கிழக்கிற்கு சென்றாலும் அபிவிருத்தி, தெற்கிற்கு சென்றாலும் அபிவிருத்தி" என்றார்.

  Comments - 0

  • vallarasu Monday, 01 April 2013 10:52 AM

    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே... பல மில்லியன் பணம் ஒதுக்கப்ப்பட்டதால்தான் நீங்கள் மக்களுக்கு தகடும், ஓலையும் கொடுக்கிறீங்கலாமே...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .