2026 மே 04, திங்கட்கிழமை

இடமாற்றத்திற்கு எதிராக ஆசிரியர் வழக்குத் தாக்கல்

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரி.எல்.ஜவ்பர்கான்

விசாரணைகள் எதுவுமின்றி இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறி ஆசிரியர் ஒருவர் மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஏறாவூர் பகுதிக்குட்பட்ட பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியரான எஸ்.எம்.எம்.நசீர் என்பவரே இவ்வாறு கல்வி பணிப்பாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி ஆசிரியர் ஏறாவூர் மட்.தாமரைக்கேணி சாகிர் மௌலானா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்து வந்த நிலையில், எவ்வித விசாரணைகளும் நியாயமான காரணங்களுமின்றி கடந்த 24.01.2013ஆம் திகதி தான் புனாரண ரெதிதென்ன அல்இக்ரா வித்தியாலயத்திற்கு திடீர்; இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறி இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த ஆசிரியரின் வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .