2026 மே 04, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் சாசனவியல் ஆரம்ப நிலை கருத்தரங்கு

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் சாசனவியல் ஆரம்ப நிலை கருத்தரங்கு மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.

ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கு எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவுபெறவுள்ளது.

முதலாம் நிகழ்வில் இங்கு கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் பொ.நிலாந்தினி, யாழ்.பல்கலைக் கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் எஸ்.கௌரி, யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை விரிவுரையாளர் திருமதி.எஸ்.சாந்தி ஆகியோரினால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.

இக்கருத்தரங்கிள் கிழக்குப் பல்கலைக்கழகம், யாழ்.பல்கலைக்கழகம், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழத்; துறை, வரலாற்றுத்துறை, இந்து நாகரீகத் துறை சார்ந்த மாணவர்கள் அடங்கலான 110 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேராசிரியர் சி.பத்மநாதன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள சிரேஷ்ட ஆரய்ச்;சி உத்தியோகத்தர் திருமதி.தேவகுமாரி ஹரன உட்பட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .