2026 மே 04, திங்கட்கிழமை

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா

Kogilavani   / 2013 ஏப்ரல் 02 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்தும் முத்தமிழ் விழா பிரதேச செயலக மண்டபத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு, 'தேனகம் மலர் வெளியீடு', கலை கலாசார நிகழ்வுகள் என்பன இடம்பெறவுள்ளதாக கலாசார உத்தியோகத்தர் எம்.சுதாகரன் தெரிவித்தார்.

இதேவேளை, ஐந்து துறைசார்ந்தவர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதனடிப்படையில், நாடகத்துறை சார்ந்து அ.இருதயநாதன், ஓவியத்துறை சார்ந்து இ.ஜெயபாலன், ஆக்க இலக்கியத்துறை சார்ந்து செ.யோகராசா, நடனத்துறை சார்ந்து கமலேஸ்வரி தவராஜரெத்தினம், இசை துறை சார்;ந்து இராஜேஸ்வரி தெட்சணாமூர்த்தி ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளனர்.

மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் (நிர்வாகம்) கலாமதி பத்மராசா, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் கே.மகேசன் மற்றும் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவர்த்தி ஆகியோர் அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .