2026 மே 04, திங்கட்கிழமை

மத்திய கிழக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைவாய்ப்பு தொடர்பாக பல்வேறுபட்ட முறைப்பாடுகள்

Kogilavani   / 2013 ஏப்ரல் 03 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலை வாய்ப்புக்காகச் செல்லும் பெண்கள் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வது தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் தகவல் தருகையில்,

'நீண்ட காலமாக ஊதியம் வழங்காது பணி செய்ய வைத்தல், கொடுமை, சித்திரவதை, துஷ;பிரயோகம் போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் கிடைத்து வருகின்றன.

இவற்றை விட வெளிநாடு செலலும் முன்னர் பயிற்சி முடிந்த கையோடு தமக்கு கர்பத்தடை ஊசி போடப்படுவதுடன் நீலப்படங்களும் போட்டுக் காண்பிக்கப்படுவதாக முறைப்பாடுகள் எமக்கு கிடைத்துள்ளன.

இதனிடையே வெளிநாடு அனுப்பவதாகக் கூறி கொழும்பில் தம்மை அடைத்து வைத்திருந்து சம்பளமற்ற வீட்டு வேலை, நாளாந்தம் பாலியல் துஷ;பிரயோகம் போன்றவற்றிற்கு உள்ளாக்குவது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்குள் மூன்று முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு முறைப்பாடு செய்த மூவரும் தப்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாடு செல்ல முன்னரான பயிற்சியை முடித்தவுடன் ஒட்டு மொத்த செலவுகளுக்குமாக முகவர்கள் முற்கூட்டியே கையொப்பம்பெற்று விடுவதாகவும் இவ்வாறான கர்பத்தடை தடுப்பூசி மற்றும் நீலப்பட விவகாரங்களைக் கண்டவுடன் அச்சமடைந்து வெளிநாடு செல்ல மறுக்கும் பெண்களிடம் மொத்தமாக நான்கு அல்லது ஐந்து இலட்சம் ரூபாய் செலவுத் தொகையை செலுத்துமாறு அப்பெண்களை முகவர்கள் வலியுறுத்துவது தொடர்பிலும் தமக்கு முறைப்பாடு  கிடைக்கப்பெற்றுள்ளது. 

அத்துடன் சம்பந்தப்பட்ட பெண்களின் அடையாள அட்டைகளை முகவர்களும் உப முகவர்களும் கையகப்படுத்திக் கொள்வதாக  பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் முறையிட்டுள்ளனர்.

கைக்குழந்தைகளை விட்டுவிட்டுத் வெளிநாடுகளுக்கு செல்லும் தாய்மார் குறித்தும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ.மனோகரன் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .